Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கம்போடியாவின் பிரின்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய இரு தனியார் நிறுவனங்களுக்கு இனி வரி ஊக்குவிப்புக் கிடையாது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் நாணய வாரியம் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இனி வரி ஊக்குவிப்பை வழங்காது.

அவை கம்போடியாவின் பிரின்ஸ் குழுமத்துடனும் (Prince Holding Group) அதனை நிறுவியவருடனும் தொடர்புடையவை என்று உறுதியானதால் அந்த முடிவு எட்டப்பட்டது.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) அதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குழுமத்தை நிறுவிய சென் சீயிடமும் (Chen Zhi) அவருடன் தொழில் நடத்துவோரிடமும் விசாரணை தொடர்வதால் அவர் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நபர்களுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று திரு சீ கூறினார்.

சிங்கப்பூரில் வலுவான கட்டுப்பாடுகள் இருக்கின்றன, எனினும் குற்றங்களை முற்றிலுமாகத் தடுப்பது சாத்தியம் இல்லை என்றார் அமைச்சர்.

முக்கிய அனைத்துலக நிதி மையங்களிலும் அதுபோன்ற தவறுகள் நடக்கின்றன என்று அவர் கூறினார்.

கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கினால் முதலீட்டாளர்கள் வருகை குறையும் என்று திரு சீ சொன்னார்.

பிரின்ஸ் குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது.

அது தொடர்பில், சிங்கப்பூர்க் காவல்துறை 150 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள சொத்தைப் பறிமுதல் செய்தது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்