Skip to main content
புகைமூட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புகைமூட்டம் - குறைந்த செலவு மருத்துவத் திட்டம் மீண்டும் தொடக்கம்

வாசிப்புநேரம் -
புகைமூட்டம் - குறைந்த செலவு மருத்துவத் திட்டம் மீண்டும் தொடக்கம்

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Oct 2026 10:39AM புதுப்பிப்பு : 11 Oct 2026 01:02PM
சிங்கப்பூரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் புகைமூட்ட மருத்துவ கட்டணக் கழிவுத் திட்டம் நாளை செயல்படுத்தப்படும்.

பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் (PHPC) பலதுறை மருந்தகங்களிலும் திட்டம் நடப்புக்கு வரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பலதுறை மருந்தகங்களில் அனைத்து சிங்கப்பூரர்களும் கட்டணக் கழிவு பெறலாம்.

PHPC மருந்தகங்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் கழிவு வழங்கப்படும்.

பொது உதவி அட்டை வைத்திருப்போருக்கு முழுமையான கட்டணக் கழிவு வழங்கப்படும்.

முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்தோர் அதிகபட்சம் 5 வெள்ளி செலுத்துவர்.

தகுதிபெறும் மற்ற சிங்கப்பூரர்களுக்குக் கட்டணம் 10 வெள்ளிக்குள் இருக்கும்.

18 வயது அல்லது அதற்கும் குறைந்த வயதினரும் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரும் PHPC மருந்தகங்களில் கட்டணக் கழிவு பெறத் தகுதிபெறுவர்.

CHAS நீலம், ஆரஞ்சு அட்டை வைத்திருப்போரும் தகுதிபெறுவர்.

ஆஸ்துமா (asthma), மூச்சுக்குழாய் அழற்சி, கண் அழற்சி, மேல் சுவாசப் பாதைத் தொற்று உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்குத் திட்டம் உதவும்.

சுவாசப் பிரச்சினைகளுடன் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளுக்கு வருவோர் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) கூறினார்.

கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவேண்டும் என்றார் அவர்.

மற்றவர்கள் மருந்தகங்களில் சிகிச்சை பெறலாம்.

புகைமூட்ட மருத்துவக் கட்டணக் கழிவுத் திட்டம் கடைசியாக 2015ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்