வெளிநாட்டுத் திறனாளர்களைச் சமூகத்தில் ஒருங்கிணைக்கப் புதிய திட்டங்கள்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Wallace Woon
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் வேலையிடங்களிலும் சமூகங்களிலும் வெளிநாட்டுத் திறனாளர்களை இன்னும் திறம்பட ஒருங்கிணைக்கப் புதிய திட்டங்கள் அறிமுகம் கண்டுள்ளன.
புதிதாக மேல்நிலை வேலை அனுமதி பெறுவோருக்கான அறிமுகத் திட்டம் அதில் அடங்கும்.
வெளிநாட்டு நிபுணர்களின் ஒருங்கிணைப்புக்கான செயல் கூட்டணி அதன் அறிக்கையை வெளியிட்டது.
அதில், புதிய வெளிநாட்டுத் திறனாளர்கள் சிங்கப்பூரில் வாழ்வதிலும் வேலை செய்வதிலும் உள்ள வழக்கங்களைப் புரிந்துகொள்வதற்கான ஐந்து வழிகள் பட்டியலிடப்பட்டன.
வேலையிடங்களில் அனைவரையும் உள்ளடக்கிய உள்நாட்டவர்-வெளிநாட்டவர் ஒருங்கிணைப்பு நடைமுறைகளைச் செயல்படுத்துவதில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கவும் அவை உதவும்.
பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று EP Journey. வேலை அனுமதி பெற்றிருப்போர் சிங்கப்பூரின் கலாசாரம், பண்புகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள அந்த நடவடிக்கை நடத்தப்படும்.
அதன் 6 மாத முன்னோடித் திட்டம் மேயில் தொடங்கியது.
முன்னோடித் திட்டத்தின் மூலம் 600 வெளிநாட்டு ஊழியர்களை அடைய வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் குறிக்கோள்.

ஆதாரம் : Mediacorp Seithi