Skip to main content
"பதக்கம் வெல்வதே இலக்கு"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"பதக்கம் வெல்வதே இலக்கு" - சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீரர் திரூபன்

வாசிப்புநேரம் -
"பதக்கம் வெல்வதே இலக்கு" - சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீரர்  திரூபன்

படம்: Singapore Athletics/Khairyll Amri

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீரர்
திரூபன் தனராஜன் (Thiruben ThanaRajan) தென்கிழக்காசிய விளையாட்டுகளில்
ஆண்கள் 800 மீட்டர் பிரிவில் பதக்கம் வெல்ல இலக்கு கொண்டுள்ளார்.

அப்படி அவர் வென்றால் 1973க்குப் பிறகு அந்தப் பிரிவில் சிங்கப்பூருக்குக் கிட்டும் முதல் பதக்கமாக அது அமையும்.

25 வயது திரூபன் போட்டியில் கலந்துகொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறார்.

ஆனால் 7 ஆண்டுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயத்தால் சிறிதுகாலம் அவர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க முடியாமல் போனது.

இவ்வாண்டுத் தொடக்கத்தில், அவர் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய திடல்திடப் போட்டியில், தேசிய அளவில் ஆண்கள் 800 மீட்டர் பிரிவில் சாதனையை முறியடித்தார்.

இம்முறை தாய்லந்தில் பதக்கம் வென்று நாடு திரும்ப அவர் உறுதியாக இருக்கிறார்.

தாய்லந்தில் நடைபெறும் 33ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை mewatch தளத்தில் நேரடியாகக் காணலாம்.

மீடியாகார்ப் ஸ்போர்ட்ஸின் (Mediacorp Sports) டிக்டொக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்பூக் (Tiktok, Instagram, Facebook) தளங்களில் போட்டிகள் குறித்த அண்மைத் தகவல்களைப் பெறலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்