31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள்: 14 வயது வாள்சிலம்ப வீரர் சிங்கப்பூரின் 2ஆவது தங்கப் பதக்கத்தை வென்றார்

(படம்: SNOC)
31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளின் மகளிர் ஒற்றையர் பிரிவு வாள்சிலம்பப் போட்டியில் 14 வயது எல்லி கோ சிங்கப்பூரின் 2ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் இறுதிச் சுற்றில் சிங்கப்பூரின் கிரியா டிகானாவை (Kiria Tikanah) எதிர்த்துப் போட்டியிட்டார்.
எல்லி 12-11 என்ற புள்ளி வித்தியாசத்தில் போட்டியை வென்றார்.
நேற்று முன்தினம் (மே 11) சிலாட் வீரர் இக்பால் அப்துல் ரஹ்மான் சிங்கப்பூரின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
-CNA