Skip to main content
சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: அதிபர் தர்மன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: அதிபர் தர்மன்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: அதிபர் தர்மன்

YouTube/CNA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் பாதுகாப்புக்கும் உலகில் சிங்கப்பூரின் இடத்தை உறுதிசெய்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.

15ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து அவர் பேசினார்.

வட்டாரத்திலும் உலகளவிலும் எதிர்பாராத நெருக்கடிகள் பெருகிவரும் சூழலில் சிங்கப்பூரின் பாதுகாப்பில் மெத்தனம் காட்டக் கூடாது என்றார் அவர்.

உள்நாட்டில் பாதுகாப்பை உறுதிசெய்ய சிங்கப்பூர் நீண்ட காலமாக உழைத்துவந்துள்ளது. 

இனி வரும் நாள்களில் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்தி, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தற்காப்புக்கு முதுகெலும்பாகத் திகழும் தேசிய சேவையாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க சிங்கப்பூர் முனையும் என்று திரு தர்மன் சொன்னார்.

பாதுகாப்பு என்பது ராணுவ வலிமையை மட்டும் சார்ந்தது அல்ல. 

புதிய எதிர்பாராத சவால்களை எதிர்கொள்வதும் அதிலடங்கும்.

உதாரணத்துக்கு வெளிநாட்டினர் சுயலாபத்துக்காக சிங்கப்பூரர்களிடையே சொந்தக் கருத்துகளைத் திணிக்க முயற்சி செய்வார்கள் என்பதை அதிபர் சுட்டினார்.

எனவே அவர்களின் தாக்கத்தைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டியிருப்பதாக அவர் சொன்னார். 

பயங்கரவாதம், மோசடிகள், மின்-சிகரெட்  போதைப்பொருள் ஆகியவற்றிலிருந்தும் நாட்டைப் பாதுகாக்க வேண்டியிருப்பதாக அவர் கூறினார். இவை அமலாக்க நடவடிக்கைகளை மட்டும் உட்படுத்தியிருக்கவில்லை; மாறாக நாட்டின் அமைதிக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை என்றார் அதிபர். 

பாதுகாப்பு - அது அனைவரின் பொறுப்பு என்று அவர் கூறினார். 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்