Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசியத் திறன்கள் அறிக்கை - எதிர்காலப் பொருளியலுக்கு ஊழியர்களைத் தயார்செய்ய முனையும் வருடாந்திர அறிக்கை

எதிர்காலப் பொருளியலுக்கு ஊழியர்களைத் தயார்செய்வதற்குப் புதிய வருடாந்திர அறிக்கை ஒன்று பயன்படுத்தப்படவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

எதிர்காலப் பொருளியலுக்கு ஊழியர்களைத் தயார்செய்வதற்குப் புதிய வருடாந்திர அறிக்கை ஒன்று பயன்படுத்தப்படவிருக்கிறது.

'தேசியத் திறன்கள் அறிக்கை' அதிகரித்துவரும் வேலை வாய்ப்புகளைக் கொண்ட, வளர்ச்சி அதிகம் உள்ள பிரிவுகளை அடையாளங்காண உதவும்.

ஊழியர்களுக்குத் தேவையான திறன்களை அடையாளம் காணவும் அது கைகொடுக்கும்.

'தேசியத் திறன்கள் அறிக்கை' வளர்ச்சிக்கான மூன்று பிரிவுகளில் கவனம் செலுத்தும்.

மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல், பராமரிப்புப் பொருளியல் ஆகியவை அவை.

மூப்படையும் மக்கள்தொகை, சுகாதாரப் பராமரிப்புக்கான அதிகரிக்கும் தேவை போன்ற சிங்கப்பூரின் தேசிய முன்னுரிமைகளின் அடிப்படையில் அவை தெரிவு செய்யப்பட்டன.

தரவுப் பகுப்பாய்வு போன்ற திறன்கள் அந்தப் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் தொழில்துறைகளுக்கு இடையே பயன்படுத்தப்படக்கூடிய கரியமிலவாயு வெளியேற்ற நிர்வாகம் போன்ற இதர திறன்களும் அவற்றில் அடங்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்