சிங்கப்பூரில் வெள்ளம் - "அனைவரும் முயற்சி எடுத்தால் எளிதில் சமாளிக்கலாம்"
வாசிப்புநேரம் -

(படம்: Facebook/PUB)
சிங்கப்பூர் தேசிய தண்ணீர் அமைப்பு (PUB) வடிகால் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இவ்வாண்டு சுமார் 150 மில்லியன் வெள்ளியைச் செலவிடவிருக்கிறது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வடிகால் உள்கட்டமைப்புத் திட்டத்தையும் அது பரிசீலிக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சென்ற மாதம் பெய்த மழையையும் அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தையும் ஒட்டி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க வெள்ளம் ஒருமுறை மட்டுமே ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
வெள்ளத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தாழ்வான பகுதிகளில் இருக்கும் கட்டடங்கள் சொந்தமாகச் சாதனங்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்று திருவாட்டி ஃபூ ஆலோசனை தந்தார்.
வெள்ளத் தடைகள், மிதவை மணல் பைகள், ஆகியவற்றைத் தந்து அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்து PUB கற்றும் தந்தாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் ஏற்படும் வெள்ளங்களைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்; அவை சில காலம் மட்டுமே நீடிப்பவை என்பதால் அவற்றைச் சமாளிக்கக் குறிப்பிட்ட முயற்சி எடுக்கப்படுவது அவசியம் என்றார் அமைச்சர் ஃபூ.
சிங்கப்பூரில் நிலப் பற்றாக்குறை இருப்பதால் அதிக வடிகால்களைக் கட்டுவது சாத்தியமில்லை, அதற்கு அதிக நிதியும் தேவை; அதற்குப் பதிலாக அரசாங்கத்துடன் சேர்ந்து அனைவரும் முயற்சி எடுத்தால் வெள்ளத்தை எளிதில் சமாளிக்கலாம் என்று அமைச்சர் ஃபூ சொன்னார்.

ஆதாரம் : CNA