அமெரிக்காவின் புதிய வரி - சிங்கப்பூர் வர்த்தகத்தில் எத்தகைய தாக்கம்?
வாசிப்புநேரம் -
படம்: YouTube/CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்கா விதித்திருக்கும் புதிய வரி குறித்து சிங்கப்பூர் கவனமாகப் பரிசீலிக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யொங் (Gan Kim Yong) கூறியிருக்கிறார்.
அதற்குக் கொடுக்கப்படும் விலையையும் விரிவான வர்த்தகத் தாக்கத்தையும் அரசாங்கம் முதலில் மதிப்பிடவேண்டும் என்றார் அவர்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் சொன்னார்.
அமெரிக்க வர்த்தகப் பேராளரோடு அரசாங்கம் தொடர்ந்து ஆக்ககரமாகப் பணியாற்றும் என்று திரு கான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் உள்ளிட்ட 60 பொருளாதாரங்கள் மீது அமெரிக்கா 10 விழுக்காடு முதல் 12.5 விழுக்காடு வரை வரி விதித்திருக்கிறது.
சிங்கப்பூரின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு, ஆண்டுக்குச் சுமார் 9.5 பில்லியன் வெள்ளி மதிப்புடைய பொருள்கள் அமெரிக்காவுக்குச் செல்கிறது. புதிய வரியால் அதில் தாக்கம் இருக்கும் என்றார் திரு கான்.

ஆதாரம் : CNA