சிங்கப்பூர் exclusive
"சட்டென்று மாறுது வானிலை" - மனிதர்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் சிங்கப்பூர்த் தமிழ்த் திரைப்படம்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது அரிது.
அப்படி அந்த வரிசையில் சேர்ந்துள்ளது "சட்டென்று மாறுது வானிலை".
திரைப்படத்தின் இயக்குநர் திரு கெவின் வில்லியம் அது பற்றி 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார்.
"மனிதர்களின் உணர்வுகளைப் பற்றிய கதை"
"மனிதர்களின் உணர்வு என்று சொல்லும்போது கேட்க சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதில் பல நுணுக்கங்கள் உள்ளன. மிகக் கடினமான ஒன்று," என்றார் திரு கெவின்.
அதை முயன்றுபார்க்கத் தாம் விரும்பியதாக அவர் சொன்னார்.
அதுவே அந்தத் திரைப்படத்தை எடுக்க உந்துதலாய் அமைந்ததாகத் திரு கெவின் குறிப்பிட்டார்.
சவால்கள் இல்லாமலா?
திரைப்படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் சிங்கப்பூர், கோலாலம்பூர், கேரளா ஆகிய இடங்களில் நடந்தன.
முதல்முறையாக அப்படிச் செய்வதால் சிரமத்தை எதிர்நோக்கியதாகத் திரு கெவின் கூறினார்.
பணிகளை ஒருங்கிணைப்பதும் சிரமமாக இருந்ததாய் அவர் சொன்னார்.

"ஒரு தொலைபேசி இருந்தால் போதும், திரைப்படத்தை எடுக்கலாம்"
திரைப்படத்தைத் தயாரிக்கப் போதுமான பணம் இல்லாமல் இருக்கலாம்.
தேவையான சாதனங்கள் இல்லாமல் இருக்கலாம்..
ஊழியர்கள் இல்லாமல் இருக்கலாம்..
ஆனால் ஒரு திரைப்படத்தை எடுக்கக் கைத்தொலைபேசி மட்டும் இருந்தால் போதும் என்றார் திரு கெவின்.
"அப்படித்தான் நான் என்னுடைய இயக்குநர் பயணத்தைத் தொடங்கினேன். இப்போது நான் இந்த நிலையில் இருக்கிறேன்" என்றார் அவர்.
அதனால் தயக்கமின்றி நினைத்ததைச் செய்வது முக்கியம் என்பது அவருடைய அறிவுரை.
"சட்டென்று மாறுது வானிலை" இன்னும் நிறைய வாய்ப்புகளைத் தேடித் தரும் என்பது திரு கெவினின் நம்பிக்கை.

ஆதாரம் : Mediacorp Seithi