Skip to main content
தமிழ் மணப்பெண்ணைக் குறிக்கும் சிங்கப்பூர் அஞ்சல்தலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தமிழ் மணப்பெண்ணைக் குறிக்கும் சிங்கப்பூர் அஞ்சல்தலை

கடிதங்களை உரியவரிடம் கொண்டுசேர்ப்பதற்கு மட்டும் அஞ்சல்தலைகள் பயன்படுத்தப்படுவதில்லை.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கடிதங்களை உரியவரிடம் கொண்டுசேர்ப்பதற்கு மட்டும் அஞ்சல்தலைகள் பயன்படுத்தப்படுவதில்லை.

ஒரு நாட்டின் பண்பாடு, பொருளியல், சமூகத்தின் அடையாளம், நல்லிணக்கம், பன்முகச் சூழல் ஆகிய கூறுகளை வெளிப்படுத்தும் காகிதச் சின்னங்களாகவும் அவை வலம் வருகின்றன.

Related article image
(படம்: நித்திஷ் செந்தூர்)

அவ்வாறு 1976ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தமிழ் மணப்பெண்ணைக் குறிக்கும் அஞ்சல்தலை சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.

மார்கரட் ஹெங் என்பவரால் அந்த அஞ்சல்தலை வடிவமைக்கப்பட்டது.

பாரம்பரியத் தமிழ்ப் பெண், திருமணக் கோலத்தில் சேலை அணிந்திருப்பதை அஞ்சல்தலை சித்திரிக்கின்றது.

"சோழமண்டலக் கரை முதல் மலாக்கா நீரிணை வரை: நம் தமிழ் மரபு குறித்த மறுபார்வை" என்னும் கண்காட்சியில் இந்த அஞ்சல்தலையைக் காணலாம். அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில் இந்தக் கண்காட்சி  நடைபெறும்.

மேலும் படிக்க


மேலும் செய்திகள் கட்டுரைகள்