Skip to main content
இளையர் ஒலிம்பிக் விளையாட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இளையர் ஒலிம்பிக் விளையாட்டு - முதல் வூஷூ தங்கப் பதக்கம்..சிங்கப்பூருக்கு

வாசிப்புநேரம் -
இளையர் ஒலிம்பிக் விளையாட்டு - முதல் வூஷூ தங்கப் பதக்கம்..சிங்கப்பூருக்கு

ActiveSG Circle website/OIS/ Remi Vallat

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Nov 2026 12:51PM புதுப்பிப்பு : 04 Nov 2026 03:04PM

இளையர் ஒலிம்பிக்கில் சிங்கப்பூரின் இங் ஸ நின் (Ng Zhe Nin)  வூஷூ விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இளையர் ஒலிம்பிக்கில் முதன்முறை வூஷூ இடம்பெறுகிறது. அதில் தங்கம் வென்று பெருமை சேர்த்திருக்கிறார் இங்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் (Senegal) இளையர் ஒலிம்பிக் நடைபெறுகிறது.

16 வயது இங் 18.713 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

"முன்னேற்றமும் பின்னடைவுகளும் நிறைய இருந்தன. நிறையப் பயிற்சி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாவற்றையும் முடித்துத் தங்கம் வென்றதை எண்ணி நிம்மதியடைகிறேன்" என்று அவர் சொன்னார்.

தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இங் நன்றி தெரிவித்தார்.

கலாசார, சமூக இளையர் துறை அமைச்சர் டேவிட் நியோ (David Neo) அவரைப் பாராட்டினார்.

இங் 10 வயதில் வூஷூப் பயணத்தைத் தொடங்கினார்.

உலக அரங்கில் பல பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு உலகச் சிறார் வூஷூப் போட்டியில் இங் ஒரு தங்கமும் வெள்ளியும் வென்றார்.

இந்த ஆண்டு அதே போட்டியில் 2 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்