Skip to main content
சிங்கப்பூரில் 13
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 13-19 வயதினர் எவ்வளவு நேரம் மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்? கூறுகிறது ஆய்வு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் தினசரி சுமார் 8.5 மணி நேரம் தங்கள் மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்துவதாகப் புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

CNA செய்தியும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து ஆய்வை நடத்தின. இளையர்களும் அவர்களின் பெற்றோரும் அதில் பங்கேற்றனர்.

சாதனங்களை இளையர்கள் சுமார் 3 மணி நேரம் கல்விக்காகவும், இரண்டு மணி நேரம் கேளிக்கைக்காகவும் பயன்படுத்தவதாகத் தெரியவந்தது.

மின்னிலக்கச் சாதனங்களில் ஆக அதிகமாக அவர்கள் திறன்பேசிகளில் நேரம் செலவழித்தனர். அதை இளையர்கள் சுமார் 3.5 மணி நேரம் பயன்படுத்தினர்.

ஆய்வில் கலந்துகொண்ட சுமார் 60 விழுக்காட்டு இளையர்கள், மன உளைச்சலையும் சோர்வையும் சமாளிக்கவே சாதனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறினர்.

சுமார் பாதிப் பேர், சாதனங்களின் பயன்பாட்டால், வேலைகளை தள்ளிப்போடுவதாகக் குறிப்பிட்டனர்.

மின்னிலக்கச் சாதனங்களின் பயன்பாட்டிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க சென்ற வாரம் புதிய தேசிய திட்டம் அறிவிக்கப்பட்டது. Grow Well SG எனும் அது, 12 வயது வரை உள்ள சிறார்களின் மின்னிலக்கப் பயன்பாட்டில் கவனம் செலுத்தும். பிற்காலத்தில் அது மூத்த பிள்ளைகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்