சிங்கப்பூர் டென்னிஸ் பொதுவிருதுப் போட்டி இன்று தொடங்குகிறது
வாசிப்புநேரம் -
(படம்: Edwin Tong/Facebook)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் டென்னிஸ் பொதுவிருதுப் போட்டி இன்று தொடங்குகிறது.
அனைத்துலகப் போட்டிகளை ஏற்றுநடத்தும் அனுபவத்தை அதிகரிக்கும் வாய்ப்பாக அது அமைவதாய் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் உயர்நிலை நிகழ்ச்சிகளை ஏற்றுநடத்துவது சிங்கப்பூரின் இலக்கு என்று அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டாளர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
மகளிர் டென்னிஸ் சங்கத்தின் சான்றிதழ் பெற்ற நடுவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு உள்ளூர் உதவியாளர்களுக்குக் கிடைக்கும் என்று திரு தோங் சொன்னார்.
அத்தகைய நிகழ்ச்சிகளை எப்படி கையாள்வது; உள்ளூர் டென்னிஸ் விளையாட்டின் தரத்தை எப்படி உயர்த்துவது போன்றவற்றை சிங்கப்பூர் டென்னிஸ் சங்கத்தைச் சேர்ந்தோர் கற்றுக்கொள்ளலாம்.
அதற்கும் மேல் சமூகத்தை விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று திரு தோங் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Others