சிங்கப்பூர்-தாய்லந்து தொடர்பை வலுப்படுத்த இணக்கம்
வாசிப்புநேரம் -
படம்: MDDI
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரும் தாய்லந்தும் சமூகச் சேவைத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியும் (Masagos Zulkifli) தாய்லந்தின் சமுதாய வளர்ச்சி, மனிதவளப் பாதுகாப்பு அமைச்சர் நிக்கோர்ன் சொம்க்லாங்கும் (Nikorn Soemklang) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒத்துழைப்பு ஐந்து அம்சங்களில் கவனம் செலுத்தும்.
சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கிடையே அதிகாரிகளைப் பரிமாறுதல், சமூக நலக் கொள்கைகள், திட்டங்கள் பற்றி கருத்துப் பரிமாறுதல் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
பேங்காக் சென்றிருக்கும் பிரதமர் லாரன்ஸ் வோங், தாய்லந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்கூனுடன் (Anutin Charnvirakul) கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
இருநாட்டு மக்களிடையே உறவை வலுப்படுத்த இருநாடுகளும் விரும்புவதாகப் பிரதமர் வோங் சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi