Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சிங்கப்பூர் நிதிக் குற்றங்களை முறியடிப்பதில் சிறந்து விளங்குகிறது"

வாசிப்புநேரம் -
"சிங்கப்பூர் நிதிக் குற்றங்களை முறியடிப்பதில் சிறந்து விளங்குகிறது"

(கோப்புப் படம்: CNA/Jeremy Long)

சிங்கப்பூர் நிதிக் குற்றங்களை முறியடிப்பதில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.

உலக அளவில் செயல்படும் FATF எனும் நிதிச் செயல்பாட்டுப் பணிக்குழு அந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஆயுதப் பரவலுக்கான நிதி, சட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய அபாயங்கள் முதலியவற்றில் சிங்கப்பூர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று குழு கூறியது.

நிதிக் குற்றங்களைக் களைய சிங்கப்பூரில் கடுமையான சட்டதிட்டங்கள் உள்ளதாகப் பணிக்குழு தெரிவித்தது.

அரசாங்கத்திலும் நிறுவனங்களிலும் அபாயங்களை அடையாளம் காண்பதில் நல்ல புரிதல் இருப்பதையும், கள்ளப் பணத்தைத் தடுப்பதில் கடுமையான விதிகள் உள்ளதையும் குழு சுட்டியது.

சிங்கப்பூர், வெளிநாட்டு நிறுவனங்கள், அறநிறுவனங்கள் போன்றவற்றுக்கான சோதனைகளை இன்னும் கடுமையாக்கும்படி FATF குழு அறிவுறுத்துகிறது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் விதிமுறைகள் வெளிநாட்டுக் கப்பல் பதிவு அலுவலகம் போன்ற அமைப்புகளை உள்ளடக்கவில்லை என்பதை அது சுட்டியது.

அத்தகைய நிதி அபாயங்களில் கூடுதல் கவனம் தேவை என்று குழு சொன்னது.

FATF குழுவின் தர நிலையைக் கட்டிக்காக்கும் வகையில் செயல்படக் கடப்பாடு கொண்டுள்ளதாகச் சிங்கப்பூர் அதிகாரிகள் கூறினர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்