Skip to main content
சூரிய சக்திப் பயன்பாடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சூரிய சக்திப் பயன்பாடு - இலக்கை நெருங்கும் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் அதன் சூரிய சக்திப் பயன்பாட்டு இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதுவரை 1.35 gigawatt சூரிய சக்திப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் வருடாந்திர சூரியசக்தித் தேவையில் அது சுமார் இரண்டு விழுக்காடு.

2030 பசுமைத் திட்டத்தின்படி, இவ்வாண்டுக்குள் ஒன்றரை gigawatt சூரிய சக்தியைப் பயன்படுத்த சிங்கப்பூர் திட்டமிடுகிறது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் (Baey Yam Keng) பசுமை திட்டம் குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

2021இல் நாட்டின் பசுமை திட்டம் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, பசுமை எரிசக்தியைப் பயன்படுத்தவும், கரிம வெளியேற்றத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டது.

தொழிற்சாலைகளின் கூரைகளில் சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்தப்படுவதைத் திரு பே சுட்டினார்.

பசுமை எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்க நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக Semakau குப்பை நிரப்பும் இடத்திற்கு அனுப்பப்படும் குப்பையின் அளவில் பெரிய மாற்றம் இல்லை என்று திரு பே சொன்னார். உள்ளூரில் கழிவுகளின் அளவு குறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்