Skip to main content
ரயில் சேவையின் நம்பகத்தன்மை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ரயில் சேவையின் நம்பகத்தன்மை- படுவீழ்ச்சி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் கடந்த ஓராண்டு காலக்கட்டத்தில் ரயில் சேவையின் நம்பகத்தன்மை சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலைக்கும் இவ்வாண்டு ஜூனுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரயில்கள் தடங்கலின்றி சராசரியாக 1.6 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளன.

2020க்குப் பிறகு பதிவான ஆகக் குறைவான பயண தூரம் அது என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 

2020இல் ரயில்கள் தடங்கலின்றி சராசரியாக 1.45 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளன.
 
5 நிமிடங்களுக்குக் குறைவான சேவைத் தாமதம் கணக்கில் எடுத்துகொள்ளப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கும் இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கு இடையே 5இல் 3 ரயில் சேவைகளின் நம்பகத்தன்மை குறைந்தது.

ரயில்கள் தடங்கலின்றி சராசரியாக பயணம் செய்த தூரம்...

டௌன்டவுன் (Downtown) 

ஜூலை 2023 - ஜூன் 2024 - 8.13 மில்லியன் கிலோமீட்டர்

ஜூலை 2024 - ஜூன் 2025 - 4.12 மில்லியன் கிலோமீட்டர்

வடக்கு-தெற்கு

ஜூலை 2023 - ஜூன் 2024: 2.49 மில்லியன் கிலோமீட்டர்

ஜூலை 2024 - ஜூன் 2025: 1.24 மில்லியன் கிலோமீட்டர்

கிழக்கு-மேற்கு

ஜூலை 2023 - ஜூன் 2024 : 1.69 மில்லியன் கிலோமீட்டர்

ஜூலை 2024 - ஜூன் 2025: 1.44 மில்லியன் கிலோமீட்டர்

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் சேவை இன்னும் முழுவீச்சில் செயல்படாததால் அது அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் சொன்னது.

ரயில் சேவையின் நம்பகத்தன்மை குறைந்திருந்தாலும் சிங்கப்பூர் இலகு ரயில் சேவையின் நம்பகத்தன்மை சற்று கூடியுள்ளதாக அது தெரிவித்தது.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்