Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒரே வாரத்தில் 2 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்

வாசிப்புநேரம் -
நிலப்போக்குவரத்து ஆணையத்தின் 2 வெவ்வேறு வேலையிடங்களில் சென்ற வாரம் 2 கட்டுமானத் துறை ஊழியர்கள் மாண்டனர்.

இந்தியாவைச் சேர்ந்த ஊழியர் சென்ற வெள்ளிக்கிழமை (15 செப்டம்பர்) வேலை செய்துகொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிள் மோதியதில் மாண்டார்.

அவருக்கு வயது 45.

மோட்டார்சைக்கிள் ஓட்டுநரும் சம்பவம் நடந்த இடத்தில் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

சென்ற சனிக்கிழமை (16 செப்டம்பர்) பணியில் ஈடுபட்டிருந்த பங்களாதேஷைச் சேர்ந்த ஊழியர் மாண்டார்.

அவருக்கு வயது 41.

தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) நிலப்போக்குவரத்து ஆணையத்தின் வருடாந்திரப் பாதுகாப்பு, சுகாதார, சுற்றுப்புற விருது நிகழ்ச்சியில் அதனைத் தெரிவித்தார்.

ஆணையத்தின் இரண்டு வேலையிடங்களில் சென்ற வாரம் இரண்டு மரணங்கள் நேர்ந்தது தமக்கு வருத்தமளிப்பதாகவும்
அவர் கூறினார்.

இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து ஆணையத்தின் வேலையிடங்களில் நேர்ந்த விபத்துகளின் எண்ணிக்கை கூடியுள்ளதைத் திரு சீ சுட்டிக்காட்டினார்.

சென்ற ஆண்டின் முதல் 8 மாதங்களில் 27ஆக இருந்த அது இந்த ஆண்டு 33க்கு உயர்ந்துள்ளது.

வேலையிட விபத்து குறித்த உயர்த்தப்பட்ட பாதுகாப்புக்காலம் முடிந்துவிட்டாலும் விழிப்புநிலையைத் தொடரவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் என்னும் முத்தரப்புப் பங்காளித்துவத்தின்மூலம் வேலையிடப் பாதுகாப்பையும் ஊழியர்களின் நலனையும் மேம்படுத்த ஒன்றிணைந்து பாடுபட திரு சீ அழைப்பு விடுத்தார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்