Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமெரிக்கா விதிக்கும் வரிகள் சிங்கப்பூரையும் பாதிக்கும்: வெளியுறவு அமைச்சர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் மீது அமெரிக்கா வரிகள் விதிக்கும் வாய்ப்புகள் குறைவு என்றாலும் மற்ற நாடுகள் மீது அது விதிக்கும் வரிகள் சிங்கப்பூரையும் பாதிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) தெரிவித்துள்ளார்.

கனடா, மெக்சிகோ, சீனா மீது அமெரிக்க விதித்துள்ள வரிகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துப் பேசினார்.

புதிய வரிகளைப் பற்றி சென்ற சனிக்கிழமையன்று (1 பிப்ரவரி) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார்.

தற்போது 30 நாள்களுக்கு கனடா, மெக்சிகோ மீது விதித்த வரிகளைத் தற்காலிகமாக ரத்துச் செய்வதாக அறிவித்துள்ளார். சீனா மீது விதித்த வரிகள் நடப்புக்கு வந்துள்ளன. அதற்குப் பதிலடியாகச் சீனா அமெரிக்கப் பொருள்கள் மீது 10 முதல் 15 விழுக்காடு வரை வரிகளை விதித்துள்ளது.

சிங்கப்பூர் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களைவிட அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் அமெரிக்கா சிங்கப்பூர் மீது வரிகளை விதிக்காது என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் பாலகிருஷ்ணன் கூறினார்.

ஆனால் மற்ற நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகள் சிங்கப்பூரைப் பாதிக்கும் என்றார் அவர். அது உலகளவில் விநியோகத் தொடரைப் பாதிக்கும். நமது பொருளாதாரம் சிறிய, வெளிப்படையான ஒன்று என்பதால் தாக்கங்கள் இருக்கும் என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்