Skip to main content
சிங்கப்பூரில் இந்த ஆண்டு இனி வெப்ப அலை ஏற்படாது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இனி வெப்ப அலை ஏற்படாது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் கோடைக்காலம் இம்மாத (மே) இறுதியில் முடிவடைந்துவிடும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி (Janil Puthucheary) தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் (2026) எஞ்சிய மாதங்களில் சிங்கப்பூரில் தகிக்கும் வெப்பம் உண்டாகும் சாத்தியம் குறைவு என்றும் அவர் சொன்னார்.

அதிகரிக்கும் வெப்பநிலையைக் கையாளக் கண்காணிப்பு அமைப்புகளும் நடவடிக்கைகளும் ஏற்கனவே நடப்பில் உள்ளன.

சிங்கப்பூரில் எது வெப்ப அலை?

- தினசரி அதிகபட்ச வெப்பநிலை தொடர்ச்சியாக 3 நாள்களுக்குக் குறைந்தது 35 டிகிரி செல்சியஸாக இருக்கவேண்டும்.

- அதே வேளை, தினசரி சராசரி வெப்பநிலை குறைந்தது 29 டிகிரி செல்சியஸைத் தொட வேண்டும்.

வெப்பநிலை அவ்வாறு பதிவானால் அது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் வானிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதாக டாக்டர் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு ஆலோசனை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

நீண்டநேரம் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களுக்கும் முறையான ஆலோசனை வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்