Skip to main content
"2025இல் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 1.5%
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"2025இல் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 1.5% - 2.5% வரை இருக்கும்"

வாசிப்புநேரம் -
"2025இல் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 1.5% - 2.5% வரை இருக்கும்"

கோப்புப் படம்: Reuters/Edgar Su

வெளியீடு : 12 Aug 2025 08:22AM புதுப்பிப்பு : 12 Aug 2025 10:27AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி ஒன்றரையிலிருந்து இரண்டரை (1.5% - 2.5%) விழுக்காடாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக, தொழில் அமைச்சு முன்னதாக பூஜ்யத்திலிருந்து இரண்டு விழுக்காடு வரை பொருளாதாரம் வளர்ச்சியடையலாம் என்று முன்னுரைத்திருந்தது.

இந்த ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கப்பட்டதை விடப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டிருப்பதால் முழு ஆண்டுக்கான முன்னுரைப்பை அமைச்சு மேல்நோக்கித் திருத்தியிருக்கிறது.

இருப்பினும், நிச்சயமற்ற சூழல் தொடர்வதால் நிலைமை மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதையும் அமைச்சு சுட்டியது.

உலகிலும் உள்நாட்டிலும் பொருளாதார மாற்றங்களைக் கூர்ந்து கவனிப்பதாக அமைச்சு கூறியது. தேவைப்பட்டால் பொருளாதார வளர்ச்சி முன்னுரைப்பில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அது சொன்னது.

சிங்கப்பூர்ப் பொருளாதாரம் ஆண்டு அடிப்படையில் இரண்டாம் காலாண்டில் 4.4 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்டதை விட அது நல்ல முன்னேற்றம்.

மொத்த வர்த்தகம், உற்பத்தி, நிதி, காப்புறுதி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தன.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்