Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கான பயண எச்சரிக்கையை உயர்நிலைக்கு மாற்றிய அமெரிக்கா

அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் சிங்கப்பூருக்கான பயண எச்சரிக்கையை உயர்நிலைக்கு மாற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கான பயண எச்சரிக்கையை உயர்நிலைக்கு மாற்றிய அமெரிக்கா

படம்: AFP/Roslan Rahman

அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் சிங்கப்பூருக்கான பயண எச்சரிக்கையை உயர்நிலைக்கு மாற்றியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா செல்ல முடியும் என்றும்
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அத்தியாவசியமற்ற காரணங்களுக்குச் சிங்கப்பூர் செல்வதைத் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த வாரம் அமெரிக்கா சிங்கப்பூருக்கான பயண விழிப்புநிலையைத் 'தெரியவில்லை' எனும் நிலையில் வகைப்படுத்தியது.

சிங்கப்பூரின் கிருமித்தொற்று நிலவரத்தைப் பற்றிய போதுமான தகவல்கள் இல்லை என அது கூறியிருந்தது.

சிங்கப்பூர் தற்போது தாய்லந்து, இஸ்ரேல், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவற்றுடன் சேர்த்து 3ஆவது நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆக உயர்நிலையான 4ஆவது நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்