Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குழந்தைப் பருவக் கல்வியாளர்களுக்கான பயிற்சி நிலையமும் தலைமையகமும் ஒரே இடத்தில்...

வாசிப்புநேரம் -
குழந்தைப் பருவக் கல்வியாளர்களுக்கான பயிற்சி நிலையமும் தலைமையகமும் ஒரே இடத்தில்...

(படம்: Facebook/Chan Chun Sing)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாலர் பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகத்தின் தலைமையகமும் குழந்தைப் பருவக் கல்வியாளர்களுக்கான பயிற்சி நிலையமும் ஒரே இடத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.

அந்தத் துறையில் கூடுதல் தகவல் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் முயற்சிகளில் அது ஒரு பகுதி.

பாலர் பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகம் 2026ஆம் ஆண்டிலிருந்து நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயல்படும்.

கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அதனை அறிவித்தார்.

எல்லாக் குழந்தைப் பருவக் கல்வியாளர்களும் கழகத்திற்கு வழக்கமாகச் சென்று கலந்துறவாடித் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

அத்துடன் அவர்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கலாம்.

கழகத்தின் வருடாந்திர மாநாட்டில் திரு. சான் உரையாற்றினார்.

பிள்ளைகளின் பலதரப்பட்ட ஆற்றல்களை வெளிக்கொணரக் கல்வியாளர்கள் பலதரப்பட்ட துறைகளில் திறன்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்