Skip to main content
சிங்கப்பூர் உணவு உற்பத்தி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் உணவு உற்பத்தி - $70 மில்லியன் முதலீடு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் உள்ளூர்ப் பண்ணைகளின் உற்பத்தியை அதிரிக்க 70 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளது.

அடுத்த 5 ஆண்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அந்தத் தொகை ஒதுக்கப்படுகிறது.

உலகளவில் நிலையற்ற சூழல் உருவாகி வருகையில் சிங்கப்பூரின் உணவு உற்பத்தியை மேம்படுத்துவது முதலீட்டின் முக்கிய நோக்கம்.

ACT எனப்படும் வேளான், உணவு உற்பத்தி மேம்பாடு நிதியின் கீழ் ஒதுக்கப்படும் புதிய நிதித் தொகை பற்றி நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) தகவல்களைப் பகிர்ந்தார்.

உணவைப் பொறுத்தவரை சிங்கப்பூர் 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக வெளிநாட்டு உற்பத்தியை நம்பியுள்ளது.

உலகளவில் உணவு விநியோகத்தில் தடை ஏற்பட நேர்ந்தால் அது சிங்கப்பூரைப் பெருமளவு பாதிக்கும்.

எனவே அத்தகைய சூழல் எழுந்தால் அதை ஓரளவு சமாளிக்க உள்ளூர் உணவு உற்பத்தியில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்றார் திரு ஸாக்கி முகமது.

புதிய நிதி ஆதரவு பெற உள்ளூர்ப் பண்ணைகள் அடுத்த மாதம் முதல் விண்ணப்பிக்கலாம். அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்