Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர், பருவநிலை தொடர்பான உறுதிமொழிகளை மறுஆய்வு செய்யவுள்ளது

சிங்கப்பூர், COP26 மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாடுகளைக் கருத்தில் கொண்டு பருவநிலை தொடர்பான அதன் உறுதிமொழிகளை மறுஆய்வு செய்யும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர், COP26 மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாடுகளைக் கருத்தில் கொண்டு பருவநிலை தொடர்பான அதன் உறுதிமொழிகளை மறுஆய்வு செய்யும்.

கரியம் சார்ந்த உத்தேசச் சந்தைகள் வழங்கும் வாய்ப்புகளும் கவனத்தில் கொள்ளப்படும்.

2 வார மாநாட்டின் நிறைவில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த கரியம் சார்ந்த சந்தைகள் போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் நாடுகள் நேற்றுக் கருத்திணக்கம் கண்டன.  

கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்ற மாநாடு, பருவநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய நடவடிக்கையை வேகப்படுத்த வகைசெய்துள்ளதாகத் திருவாட்டி ஃபூ கூறினார்.

வெப்பநிலைை உயர்வை ஒன்றரை டிகிரி செல்சியஸுக்குள்ளாக வைத்திருப்பதற்கான உடன்பாடு குறித்துக் கூடுதல் நேரம் பேச்சு நடைபெற்றது.

போராடிப் பெற்ற உடன்பாட்டின் விளைவு சிங்கப்பூரில் உணரப்படும்.

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் சிங்கப்பூர் மேலும் வலுவான அணுகுமுறையைப் பின்பற்றும் என்றார் அமைச்சர் ஃபூ.

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து சிங்கப்பூரில் அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூரர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa