சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
HDB மறுவிற்பனை வீடுகளை வாங்க இளையர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா? - சொத்து முகவர்களின் பார்வையில்.....
சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் மறுவிற்பனைச் சந்தை நிலைப்பெறத் தொடங்கியதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.
கடந்த ஆண்டில் HDB மறுவிற்பனை வீடுகளின் விலை 4.9 விழுக்காடு அதிகரித்தது.
அதற்கு முந்தைய ஆண்டில் அது 10.4 விழுக்காடு உயர்ந்தது.
சிங்கப்பூரிலுள்ள இளையர்கள் மறுவிற்பனை வீடுகளை வாங்குவதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகின்றனர்?
அதனைக் கண்டறிய சில சொத்து முகவர்களிடம் பேசியது 'செய்தி'.
இளையர்கள் மறுவிற்பனை வீடுகளை விரும்பக் காரணங்கள்?
இளையர்களில் பலர் தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் BTO வீடுகளை வாங்க ஆர்வம் காட்டினாலும் சிலர் மறுவிற்பனை வீடுகளை வாங்க நிச்சயம் விரும்புகின்றனர் என்று கூறுகிறார் சொத்து முகவர் நிஸாம் கஃபூர் (Nizam Gaffor).
🏠பெற்றோரின் அருகில் வசிக்கலாம்
🏠வேலையிடத்துக்குப் பக்கத்தில் இருக்கலாம்
🏠பிள்ளைகளை விரும்பிய பள்ளிக்கு அனுப்பலாம்
🏠BTO வீடுகளுக்குக் காத்திருக்க வேண்டிய தேவையில்லை
எனச் சில காரணங்கள் இருப்பதை அவர் குறிப்பிட்டார். அதனால் மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகமாக இருந்தாலும் அதனைச் சிலர் வாங்குவதாகத் திரு நிஸாம் சொன்னார்.
🏠நல்ல வருமானம்
🏠பெற்றோரின் நிதி ஆதரவு
🏠வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்
🏠தவிர்க்க முடியாத சில காரணங்கள்
ஆலோசனை?
இப்படிப் பல காரணங்களுக்காக மறுவிற்பனை வீடுகளை வாங்குவோருக்குச் சொத்து முகவர்கள் சில ஆலோசனைகளை வழங்கினர்.
📍மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகம் என்பதால் அதனை வாங்க விரும்புவோர் முதலில் தங்களது வரவு-செலவுத் திட்டத்தைத் தயார் செய்வது முக்கியம்
📍அடுத்த 5 ஆண்டுகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.
📍சிலர் முதலில் இருக்கும் ஆர்வத்தில் வீட்டை வாங்குவதாக ஒப்புக்கொண்டு பின்னர் சிறு சிறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவார்கள். உதாரணத்துக்கு அது பழைய புளோக்காக இருந்தால் குழாயில் தண்ணீர்க் கசியும் புகார் அதிகம் பெறப்படுகிறது.
📍மறுவிற்பனை வீட்டை வாங்கும் முன்னரே அந்த வீட்டைப் பற்றி உரிமையாளரிடம் முடிந்த வரை கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபெறுவது அவசியம்.
📍தேவையைப் பொறுத்து மறுவிற்பனை வீட்டை வாங்குவது பற்றி யோசிக்கலாம்; இல்லையென்றால் BTO வீட்டுக்காகக் காத்திருப்பது நல்லது
சொத்து முகவர் ராமா
📍 சிலர் மூவறை வீட்டை வாங்கிவிட்டுப் பின்னர் குழந்தைகள் பிறந்ததும் இன்னும் பெரிய வீடு வாங்கியிருக்கலாம் என்று வருந்துகின்றனர். எனவே முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் திரு நிஸாம் வலியுறுத்தினார்.