பொன்விழாக் காணும் சிங்கப்பூர் விலங்குத் தோட்டம்

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் நுழைவாயில். (படம்: TODAY)
சிங்கப்பூர் விலங்குத் தோட்டம் 50 ஆண்டுகள் நிறைவை எட்டுகிறது.
பொன்விழாவை ஒட்டி மே மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் விலங்குத் தோட்டம் உருவான கதை தெரியுமா?
இதோ தெரிந்துகொள்ளலாம்...
1968
அப்போது சிங்கப்பூர்ப் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தலைவராக இருந்த மறைந்த டாக்டர் ஓங் சுவீ லாவ், அப்பர் சிலேத்தார் ரெசர்வோயரைச் சுற்றி விலங்கியல் தோட்டம் அமைக்கலாம் என்று பரிந்துரைத்தார்.

1973
1973ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் திறக்கப்பட்டது.

பிறகு அதன் பெயர் சிங்கப்பூர் விலங்குத் தோட்டம் என்று மாற்றப்பட்டது.

28 ஹெக்டர் நிலத்தில் 72 வகைகளைச் சேர்ந்த மொத்தம் 272 விலங்குகள் அப்போது இருந்தன.
1974
திறந்த 17 மாதங்கள் கழித்து, தீபாவளிப் பண்டிகை அன்று விலங்குத் தோட்டத்தின் வருகையாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது.

அந்த எண்ணிக்கையைத் தொடக் குறைந்தது இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது.
1975
முதல் ஓராங் உத்தான் (Orangutan) குட்டி பிறந்தது.

அதன் பின்னர் விலங்குத் தோட்டத்தில் 44க்கும் அதிகமான ஓராங் உத்தான் குட்டிகள் பிறந்திருக்கின்றன.
அவற்றில் பல, மற்ற விலங்குத் தோட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
1990
முதல் பனிக்கரடி பிறந்தது.

வெப்பமண்டல நாடுகளில் பிறந்த முதல் பனிக்கரடி அதுவே.
அதன் பெயர் இனூக்கா (Inuka). அதன் தாயார் ஷீபாவும் தந்தை நனூக்கும் 1978ஆம் ஆண்டு விலங்குத் தோட்டத்திற்கு வந்தன.
1992
சிங்கப்பூரின் சிறப்புச் சுற்றுலாத் தூதர் என்ற விருது ஆ மெங் ஓராங் உத்தானுக்கு வழங்கப்பட்டது.
அந்த விருதின் முதல் மற்றும் ஒரே மனிதரல்லாத பெறுநர் அதுவே.
2003

மியன்மாரின் கட்டிடக்கலையுடன் உருவாக்கப்பட்ட ஆசிய யானைகளின் காட்சிக்கூடம் அப்போதைய அதிபர் S.R. நாதனால் திறக்கப்பட்டது.
2006
3.6 மில்லியன் வெள்ளி செலவில் வனவிலங்குச் சுகாதார, ஆய்வு நிலையம் திறக்கப்பட்டது.
2008

ஆ மெங் காலமானது. அதற்குச் சுமார் 50 வயது.
4,000 பேர் அதன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.
விலங்குத் தோட்டத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட முதல் விலங்கு அதுவே.
2013

விலங்குத் தோட்டத்தின் 40ஆவது ஆண்டை அனுசரிக்கும் வகையில் இனூக்காவின் புதிய வசிப்பிடம் திறக்கப்பட்டது.
இனூக்கா 27 வயதில் மாண்டது.
2016

2023
விலங்குத் தோட்டத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு!
300க்கும் அதிகமான வகைகளைச் சேர்ந்த சுமார் 4,200 விலங்குகள் உள்ளன.