Skip to main content
போதைப்பொருள், கள்ளப் பணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

போதைப்பொருள், கள்ளப் பணம் - சிங்கப்பூரருக்கு 31 ஆண்டு சிறை

வாசிப்புநேரம் -
போதைப்பொருளைக் கடத்தியதற்கும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதற்கும் 58 வயது சிங்கப்பூரருகுக்கு 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளைக் கடத்தியதில் அவர் 18,050 வெள்ளி சம்பாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்தது.

2023ஆம் ஆண்டில் அவரை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து 713 கிராம் heroinஉம் 4 ecstasy மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் கடத்தலின் மூலம் பெறும் பணத்தை வைத்துக்கொள்வது, பயன்படுத்துவது, மறைப்பது, மாற்றுவது, வேறு ஒருவருக்குக் கொடுப்பது அனைத்துமே குற்றச்செயல்கள்.

குற்றத்துக்கு 10 ஆண்டுவரை சிறைத்தண்டனை, 500,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்