Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆஸ்திரேலியாவில் அந்தரங்கக் காணொளி எடுத்த சிங்கப்பூர் மருத்துவர் மீது கூடுதல் குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் அந்தரங்கக் காணொளி எடுத்த சிங்கப்பூர் மருத்துவர் மீது கூடுதல் குற்றச்சாட்டு

(படம்: Google Street View)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் (Melbourne) நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சக ஊழியர்களைக் கழிப்பறையில் காணொளியெடுத்த சிங்கப்பூர் மருத்துவர்மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

27 வயது மருத்துவர் ராயன் சோ (Ryan Cho) மீது அந்தரங்க நிழற்படங்கள் எடுத்தது உட்பட 5 கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ABC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

மருத்துவமனையின் கழிப்பறையில் கைத்தொலைபேசி ஒன்றை அவர் மறைத்துவைத்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

அவர் 3 மருத்துவமனைகளில் சுமார் 460 பேரின் அந்தரங்கத்தைக் காணொளி எடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்தகைய சுமார் 4,500 காணொளிகளை அவர் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் 2021ஆம் ஆண்டிலிருந்து அந்த 3 மருத்துவமனைகளில் பணியாற்றிய பெண் மருத்துவர்கள், தாதிகள், மருத்துவமனை ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ராயன் சோவிடமிருந்து 2 கைத்தொலைபேசிகள், மடிகணினி, தகவல் சேமிப்புக் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சோ மறுத்துள்ளதாகவும் அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
 
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்