குடிநுழைவு அதிகாரியைப் படம் எடுத்துக் காணொளியைப் பதிவேற்றியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Jeremy Long)
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில், குடிநுழைவு அதிகாரியின் நிழற்படத்தையும் காணொளியையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.
37 வயது வோங் ஜியோ வா (Wong Jeo Wah) இம்மாதம் (ஆகஸ்ட் 2024) 12ஆம் தேதி அனுமதியின்றிப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் படங்களும் காணொளியும் எடுத்ததாக, உள்கட்டமைப்புப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அதிகாரிகளின் அனுமதியின்றிச் சோதனைச்சாவடிகள் போன்ற பாதுகாக்கப்பட்ட இடங்களில் படம் பிடிக்கக்கூடாது.
குடிநுழைவு அதிகாரி ஒருவர் முரட்டுத்தனமாய் நடந்துகொண்டதாக வோங் கூறினார்.
சம்பவத்தை இணையத்தில் வோங் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஈராண்டு வரை சிறை, 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.