மலேசியாவில் முக்குளிக்கச் சென்ற சிங்கப்பூரர் மயங்கி, நுரை தப்பி மரணம்
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரைச் சேர்ந்த 72 வயது முதியவர் மலேசியாவின் தியோமான் தீவுக்கு (Tioman Island) விடுமுறைக்காகச் சென்றபோது அங்கு உயிரிழந்ததாக Sinar Harian நாளேடு தெரிவித்தது.
திரு லோ சூன் ஃபொய் (Low Choon Foi) முக்குளிக்கச் சென்றபோது மாண்டார். அவர் ஓய்வுபெற்ற பொறியாளர்.
நேற்று (5 ஜூலை) காலை 14 நண்பர்களுடன் திரு லோ ஹோட்டலைச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று சிங்கப்பூருக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தனர்.
மாலை சுமார் 6:30 மணியளவில் கம்போங் பாயா கடற்கரையில் திரு லோவும் அவரது நண்பரும் முக்குளிக்கச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. 7:40 மணியளவில் கடற்கரையில் மயக்கநிலையில் கிடந்த திரு லோவை அவரது நண்பர் கண்டார். அவரது வாயில் நுரை தென்பட்டது.
திரு லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மரணத்தை மருத்துவர்கள் இரவு சுமார் 9:20 மணியளவில் உறுதிசெய்தனர்.
திரு லோவின் மரணத்தில் சூது இல்லை என்று மலேசியக் காவல்துறை கூறியது. முக்குளிக்கச் செல்வதற்கு முன்னர் உடல்நலம் சரியாக இருப்பதை உறுதிசெய்யும்படியும் காவல்துறை மக்களிடம் கேட்டுக்கொண்டது.

ஆதாரம் : Others