Skip to main content
சட்டவிரோதமாக ஊழியர்களை இறக்கிய ஆடவருக்கு 40 மாதச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சட்டவிரோதமாக ஊழியர்களை இறக்கிய ஆடவருக்கு 40 மாதச் சிறை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்குச் சட்டவிரோதமாக ஊழியர்களை இறக்குமதி செய்ததாக லியோங் குவாய் தோங் (Leong Kwai Tong) எனும் ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அந்த சிங்கப்பூரருக்கு 40 மாதச் சிறைத்தண்டனையும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்படும். குற்றச்செயல் வழியாகக் கிடைத்த 105,000 வெள்ளியைச் செலுத்தவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

லியோங் 66 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். அவற்றில் 22 குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார். 44 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

லியோங்கிற்கு உடந்தையாக இருந்த 4 சிங்கப்பூர் ஆடவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லியோங் அவர்களுடன் சேர்ந்து சில செயல்படாத நிறுவனங்களை உருவாக்கி வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி பெற்றுத் தந்தார்.

அவர்களிடமிருந்து லியோங் மாதந்தோறும் 2,000 முதல் 5,000 வெள்ளி வரை வாங்கினார்.

இத்தகைய மோசடிகளின் வழி லியோங் 105,000 வெள்ளி சம்பாதித்தார்.

லியோங்கிற்கு உடந்தையாக இருந்தவர்களில் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் தண்டனை நிலுவையில் உள்ளது. ஒருவரின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஒருவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 66 வெளிநாட்டு ஊழியர்களில் 15 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவரின் வழக்கு நிலுவையில் உள்ளது. 16 பேர் விசாரணை தொடங்கும் முன்பே சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர். எஞ்சிய 34 பேர் எச்சரிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்