உட்லண்ட்ஸில் சோதனைச் சாவடியில் ஓட முயன்ற ஆடவர் கைது
படம்: CNA/Abel Khoo
This audio is generated by an AI tool.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கூடுதல் பாதுகாப்புச் சோதனைகளிலிருந்து தப்பிக்க முயன்ற 37 வயது சிங்கப்பூரரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் நேற்று நடந்ததாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) சொன்னது.
காலை ஆறரை மணியளவில் சந்தேகத்திற்குரிய வகையில் அந்த நபர் தமது கால்சட்டைக்குள் எதையோ மறைத்து வைத்திருப்பதை உணர்ந்த பாதுகாப்பு அதிகாரி அவரைச் சோதனைக்கு அழைத்தார்.
ஆனால் ஆடவர் தமது பொருள்களுடன் அங்கிருந்து தப்பியோடினார்.
அதிகாரிகள் அவரைச் சோதனைச் சாவடி வளாகத்திற்குள்ளேயே மடக்கிப் பிடித்தனர்.
அவரிடமிருந்து வரி செலுத்தப்படாத 5 சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20,000 வெள்ளி அபராதம், கூடியபட்சம் 2 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரின் எல்லைப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் ஆணையமும் சிங்கப்பூர்க் காவல்துறையும் மிகவும் தீவிரமாக இருக்கின்றன. எனவே பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.