Skip to main content
ரொனால்டோவைப் படம்பிடித்துப் பிரபலமான சிங்கப்பூரர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

ரொனால்டோவைப் படம்பிடித்துப் பிரபலமான சிங்கப்பூரர்

வாசிப்புநேரம் -
ரொனால்டோவைப் படம்பிடித்துப் பிரபலமான சிங்கப்பூரர்

படம்: Edmund Wong

வெளியீடு : 29 Jun 2026 09:30PM புதுப்பிப்பு : 30 Jun 2026 10:45AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சமூக ஊடகம் எங்கும் ஒரு சிங்கப்பூர் புகைப்படக் கலைஞரைப் பற்றியே பேச்சு.

யார் அவர்? அவர் சாதித்தது என்ன?

அவர் 30 வயதுடைய எட்மண்ட் வோங் (Edmund Wong).

வோங் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின்போது படம் எடுக்கிறார்.

கடந்த புதன்கிழமை (24 ஜூன்) போர்ச்சுகலும்
உஸ்பெக்கிஸ்தானும் போட்டியிட்டன.

போர்ச்சுகல் 5-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தமது அணியினரை வாரியணைப்பதை அவர் படம் எடுத்தார்.

ரொனால்டோ தமது Instagram கணக்கில் அந்தப் படத்தைப் பதிவிட்டார்.

முதலில் அவர் வோங்கின் பெயரைக் குறிப்பிடவில்லை.

பின்னர் அவர் வோங்கிற்கு அங்கீகாரம் கொடுத்தார்.

ரொனால்டோவுடன் பேசுவதற்கான வாய்ப்பும் வோங்கிற்கு அமைத்துத் தரப்பட்டது.

இணையவாசிகள் பலரும் வோங்கிற்குப் புகழாரம் சூட்டினர்.

தாம் எடுத்த படத்தை ரொனால்டோ பார்த்ததே பெருமகிழ்ச்சி என்றார் வோங்.

அவர் அந்தப் படத்தை எப்படி எடுத்தார் என்பதைக் காட்டும் காணொளியையும் வோங் பதிவிட்டார்.

படத்தைப் பகிர எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்பது குறித்துப் பேசலாமா என்று ரொனால்டோவிடம் கேட்பது போல் அவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

தமது கனவு கைகூடியதாகவும் ஓர் இலக்கை அடைந்துவிட்டதாகவும் வோங் CNA Lifestyleஇடம் தெரிவித்தார்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்