போலித் துப்பாக்கியைக் கொண்டு வங்கியில் கொள்ளையடித்த 75 வயது சிங்கப்பூரருக்குச் சிறை
வாசிப்புநேரம் -

(படம்: Envato Elements)
சிங்கப்பூரைச் சேர்ந்த 75 வயது லியோங் ஹௌ செங் (Leong How Seng) ஹாங்காங் வங்கியைக் கொள்ளையடித்ததற்காக அவருக்கு 11 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சம்பவம் நடந்தது.
போலித் துப்பாக்கியைக் கையில் ஏந்திக்கொண்டு அவர் China Construction வங்கியிலிருந்து 2,400 வெள்ளியைத் திருடிவிட்டு அவ்விடத்தைவிட்டுத் தப்பி ஓடினார்.
அவர் திருடிய பணத்தைக் கொண்டு தமது வீட்டு வாடகையைக் கட்டினார். அத்துடன் புதிய பை, போக்குவரத்து அட்டைக்கான கட்டணம் ஆகியவற்றுக்கும் பணம் செலவழித்தார்.
சம்பவம் நடந்த அதே நாள் ஆடவர் கைதுசெய்யப்பட்டதாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது.
போலித் துப்பாக்கியும் எஞ்சிய பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆதாரம் : Others