சிங்கப்பூர் trending
TikTok இல் மாப்பிள்ளை தேடும் சிங்கப்பூர்ப் பெண்
TikTok/Dionis
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்ப் பெண் ஒருவர் TikTok செயலியில் மாப்பிள்ளை தேடுகிறார்.
டியோனிஸ் லியாவ் (Dionis Liaw) இணையக் காணொளி உலகில் பிரபலமானவர்.
உரிய வயதில் வாழ்க்கைத் துணையைத் தேடிப் பிடிக்க வலைவீசினார்.
பொருத்தமானவர்களைத் தேடிக் கொடுக்கும் பல்வேறு செயலிகளில் 1,000 வெள்ளிக்கு மேல் செலவிட்டார்.
மனத்துக்குப் பிடித்த மணாளரை மட்டும் கண்டுபிடிக்க இயலவில்லை.
மனந்தளராத 32 வயது மங்கை TikTokஇல் களமிறங்கினார்.
தம் விருப்பம் என்னென்ன என்பதைத் தெளிவாகப் பட்டியலிட்டார் லியாவ்.
மணமகனாய் வருபவர் எப்படி இருக்க வேண்டும்? குழந்தைகள், நிலையான பொருளாதார வசதி, புகை பிடிக்கக்கூடாது, கலகலப்பாய் பேச வேண்டும் என்று தம் எதிர்பார்ப்புகளை வெளிப்படையாகப் பட்டியலிட்டுப் பந்தி வைத்துவிட்டார் லியாவ்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
லியாவின் வித்தியாசமான அணுகுமுறைக்கு நல்ல வரவேற்பு.
இதுவரை 123 பேர் லியாவ்வைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஒருவரைத் தெரிவுசெய்து பேசிப் பழகிப் பார்த்திருக்கிறார் லியாவ்.
கணவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல; யாரைச் சந்திப்பது பொருத்தமாய் இருக்கும் என்பதை முடிவு செய்யவே TikTok செயலியில் படிவத்தைக் கொடுத்ததாகச் சொல்கிறார் லியாவ்.