மத்திய கிழக்கிலிருந்து புறப்பட உதவி தேவையா? - வெளியுறவு அமைச்சு நடத்திய ஆய்வு
This audio is generated by an AI tool.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சிங்கப்பூரர்களுக்கு அங்கிருந்து புறப்பட உதவி வேண்டுமா என்ற கருத்தாய்வை வெளியுறவு அமைச்சு நடத்தியுள்ளது.
எத்தனைப் பேருக்கு அத்தகைய உதவி தேவைப்படுகிறது என்பதற்காகவே அந்தக் கருத்தாய்வு நடத்தப்படுவதாகக் கூறிய அது இதுவரை மத்திய கிழக்கிலிருந்து வெளியேறுவதற்கான எவ்விதத் திட்டமும் வரையப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது.
4 வழிகள் ஆலோசிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரர்கள் நிலம் வழியாக வேறு இடங்களுக்குப் பயணம் செய்யவேண்டி வரலாம்.
துபாயிலிருந்து சுமார் 8 மணி நேரம் பயணம் செய்து மஸ்கத்தை அடைவது.
அபு தாபியிலிருந்து சுமார் 10 மணி நேரம் பயணம் செய்து மஸ்கத்தை அடைவது.
டோஹாவிலிருந்து 7 மணி நேரப் பயணத்தில் ரியாத் செல்வது அல்லது 17 மணி நேரப் பயணத்தில் ஜித்தா செல்வது.
அம்மானிலிருந்து 15 மணி நேரப் பயணத்தில் ஜித்தா செல்வது.
மத்திய கிழக்கிலிருந்து வெளியேறத் திட்டமிடும் சிங்கப்பூரர்கள் அதற்காகும் செலவை சுயமாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென அமைச்சு கூறியது.
மத்திய கிழக்கில் உள்ள சிங்கப்பூரர்கள் அமைச்சின் தளத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.