Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள் இந்தியாவைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்: பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரர்கள் இந்தியாவைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு - வர்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றுக்கு அப்பாலும் செல்வதாக அவர் சொன்னார்.

இந்தியப் பயணத்தின் இறுதி நாளில் நேற்று புதுடில்லியில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார் திரு வோங்.

சிங்கப்பூரில் வசித்துப் பணிபுரியும் இந்தியர்கள் இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறார்கள்.

பலர் இந்திய வர்த்தக உலகில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்றும் அவர்கள் இரு நாட்டு வர்த்தகச் சமூகங்களை ஒன்றிணைக்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.

ஆனால் அவர்களை மட்டும் நம்பி இருக்க முடியாது என்ற அவர் இந்தியாவைப் பற்றிய புரிதலுக்கு இன்னும் வலுவான அடித்தளம் அமைக்கவேண்டும் என்றார்.

அரசாங்கத் தரப்பில் இதனைச் செய்வதாகவும் ஆனால் அதையும் கடந்து கல்வி, தொழில், கலாசாரம் முதலிய துறைகளில் மேலும் பரிமாற்றங்களை ஊக்குவிக்கவேண்டும் என்றார் பிரதமர்.

மாணவர்கள் முதல் தொழில்முனைவோர் வரை சிங்கப்பூரர்கள் இந்தியாவைப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வளர்த்துக்கொண்டால், இரு நாடுகளின் நீண்டகால உறவை அது மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்