Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஹஜ் யாத்திரை மேற்கொள்வோர் 3 தடுப்பூசிகளைப் போட்டிருக்க வேண்டும்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹஜ் யாத்திரைக்காக அடுத்த மாதம் சவுதி அரேபியா செல்வோர் அங்கு புறப்படுவதற்கு முன் மூன்று தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

யாத்திரையின்போது அவர்களின் உடல்நலனைப் பாதுகாக்க அவை உதவும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாத்ரீகர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது நோய்ப்பரவலில் இருந்து பாதுகாப்பாய் இருக்க அவை கைகொடுக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

புறப்படுவதற்குப் பத்து நாள் முன்பே தடுப்பூசிகளைப் போட்டு முடித்திருக்க வேண்டும் என்று அமைச்சு கூறியுள்ளது.

மூன்று தடுப்பூசிகளில் ஒன்று கோவிட்-19 நோய்க்கு எதிரானது.

யாத்ரீகர்கள் புறப்படுவதற்கு முன்னர் ஓராண்டுக்குள் சளிக்காய்ச்சல் தடுப்பூசியும் போட்டிருக்கவேண்டும். அதற்கான ஆதாரமும் தேவை என்று அமைச்சு சொன்னது.

பயணம் செய்வதற்கு நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்கு முன்னர் தங்கள் மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெறுவது நல்லது என்றும் அதிகாரிகள் கூறினர்.

யாத்ரீகர்கள் தடுப்பூசிச் சான்றிதழ்களை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். மின்னிலக்கச் சான்றிதழை HealthHub செயலியில் பதிவிறக்கம் செய்யலாம்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்