Skip to main content
சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் செப்டம்பர் 5 முதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் செப்டம்பர் 5 முதல்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் செப்டம்பர் 5ஆம் தேதி கூடவிருக்கிறது.

மே 3ஆம் தேதி நிறைவடைந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றம் முதல்முறையாகக் கூடுகிறது.

மாலை 5 மணிக்குப் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வர். புதிய நாடாளுமன்ற நாயகரும் நியமிக்கப்படுவார்.

அது குறித்து நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா இன்று அறிக்கை வெளியிட்டார்.

புதிய நாடாளுமன்றத்தில் 97 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பர்.

அன்றைய தினம் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவரது தொடக்க உரையை ஆற்றுவார். அரசாங்கத்தின் முன்னுரிமைகள், கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி அவர் பேசுவார்.

அதிபரின் உரை குறித்த விவாதம் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்