தென் கிழக்காசிய விளையாட்டுகள்: 558 சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் பங்கேற்பு
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/Team Singapore/ Lim Weixiang/SNOC)
கம்போடியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த 558 விளையாட்டாளர்கள் பங்குபெறவிருக்கின்றனர்.
அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் முதல்முறை போட்டியிடுபவர்கள்.
வரும் 2029-ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெறும்.
அதற்குத் தயாராக கம்போடியாவுக்கு அதிக இளம் விளையாட்டாளர்களை சிங்கப்பூர் அனுப்புகிறது.
30 விளையாட்டுகளில் சிங்கப்பூர் அணி போட்டியிடும்.
ஐந்தாவது முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் உடற்கட்டழகுப் போட்டியாளர் டெர்ரி டே (Terry Tay) சிங்கப்பூர் கொடியை ஏந்தி அணிக்குத் தலைமையேற்றுச் செல்வார்.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் கம்போடியாவில் மே ஐந்தாம் தேதி தொடங்கும்.