Skip to main content
சிங்கப்பூர் ஆகாயப்படைக்கு 3 விருதுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஆகாயப்படைக்கு 3 விருதுகள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஆகாயப்படைக்கு 3 விருதுகள்

Facebook/Ministry of Defence, Singapore (MINDEF)

வெளியீடு : 14 Jun 2026 04:44PM புதுப்பிப்பு : 14 Jun 2026 05:36PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் ஆகாயப்படை, அமெரிக்காவில் நடைபெற்ற பெரிய அளவிலான பலதரப்பு ஆகாயப் போர்ப் பயிற்சியில் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.

Red Flag எனும் அந்தப் பயிற்சியில் சிறந்த அணித் தளபதி, முன்னணிப் பராமரிப்புப் பிரிவு, ஆக அதிக எண்ணிக்கையிலான போர் நடவடிக்கை ஆகிய விருதுகளை அது கைப்பற்றியது.

அலாஸ்காவில் உள்ள இயெல்சன் (Eielson) ஆகாயப்படைத் தளத்தில் வெள்ளிக்கிழமை பயிற்சி முடிவடைந்தது.

அதற்கு சிங்கப்பூர், பத்து F-16 ரக விமானங்களையும் எட்டு F-15SG ரக விமானங்களையும் அனுப்பியிருந்தது.

அதன் அதிகாரிகள் 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள் மற்றும் 2,100க்கும் மேற்பட்ட சேவையாளர்களுடன் பயிற்சி செய்தனர்.

அமெரிக்கா, பெல்ஜியம், கனடா, நியூஸிலந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளும் பயிற்சியில் கலந்துகொண்டன.

பாவனை செய்யப்பட்ட போர்ச்சூழலில் ஆகாயப் போர், தாக்குதல் ஆகிய பயிற்சி நடவடிக்கைகளில் வீரர்கள் ஈடுபட்டனர்.

ஆகாயத்திலும் நிலத்திலும் எதார்த்தமான அதே வேளையில் சவாலான நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

நடவடிக்கைத் திறனையும் போர் ஆயத்தநிலையையும் மேம்படுத்த தனது வீரர்களுக்குப் பயிற்சி உதவியதாக சிங்கப்பூர் ஆகாயப்படை தெரிவித்தது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்