Skip to main content
தேசிய நலனைப் பாதுகாக்கும் சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேசிய நலனைப் பாதுகாக்கும் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
தேசிய நலனைப் பாதுகாக்கும் சிங்கப்பூர்

படம்: CNA

சிங்கப்பூர் பொருளியலைத் தடையற்ற ஒன்றாக வைத்திருக்கும் அதேவேளையில் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் அணுகுமுறைக்கும் மாறிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளியல் நிபுணர்கள், வர்த்தகர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong) அதனைத் தெரிவித்தார்.

நாடுகள் ஏற்கனவே உள்ள உலக அமைப்புகளுக்கு மாற்றாகச் சிலவற்றை உருவாக்க விரும்புவதாகவும் விநியோகத் தொடர்ச்சியைச் சீரமைக்க விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

அத்தகைய சூழலில் பொருளியலின் இன்றியமையாத அம்சங்கள் தேசியப் பாதுகாப்புடன் ஒப்பிடப்படுவதாகத் திரு. கான் கூறினார்.

பொருளியல் வளர்ச்சியை விட்டுக்கொடுத்தும்கூடத் தடைகள், ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாடுகள், முதலீட்டுக் கட்டுப்பாடுகள், தொழில்நுட்பப் பரிமாற்ற நிபந்தனைகள் ஆகியவற்றை அமல்படுத்த நாடுகள் தயாராய் உள்ளதாக அவர் சொன்னார்.

எனவேதான் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியம் எனக் கருதப்படும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கும் சட்ட மசோதாவைத் தமது அமைச்சு முன்வைத்துள்ளது என்றார் திரு. கான்.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்