Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

எதிர்பார்ப்பை மிஞ்சிய சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருள் ஏற்றுமதி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி சென்ற மாதம் 24.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகம்.

செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வலுவான தேவை காரணமாக ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் (ICs), வட்டு ஊடகத் தயாரிப்புகள் (disk media products), தனிநபர் கணினிகள் போன்ற மின்னியல் சாதனங்களின் ஏற்றுமதி பெருகியது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

Enterprise Singapore அமைப்பு அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இது ராய்ட்டர்ஸ் (Reuters) கருத்துக்கணிப்பில் முன்னுரைக்கப்பட்ட 10.9 விழுக்காட்டு வளர்ச்சியை விட அதிகம்.

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்