Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2008-ஆம் ஆண்டிலிருந்து ஆக அதிகமாக உயர்ந்துள்ள அடிப்படைப் பணவீக்கம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 3. 6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது.

அடிப்படைப் பணவீக்கம் 2008-ஆம் ஆண்டிலிருந்து ஆக அதிகமாக உயர்ந்துள்ளது.

ஏப்ரலில் அது 3.3 விழுக்காடு அதிகரித்திருந்தது.

உணவு, சேவைகள், சில்லறை வர்த்தகம், எரிசக்தி, எரிபொருள் எனச் சுமார் அனைத்து துறைகளிலும் வலுவான பணவீக்கம் தென்பட்டது.

அனைத்துப் பொருள்களுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 5.6 விழுக்காடு அதிகரித்தது.

ஏப்ரலில் அது 5.4 விழுக்காடு அதிகரித்திருந்தது.

வீட்டு விலைகள், தனியார் போக்குவரத்து ஆகியவற்றில் ஏற்பட்ட பணவீக்கத்தால் அந்த நிலை ஏற்பட்டது.

மாத அடிப்படையில் அடிப்படைப் பயனீட்டாளர் விலைக் குறியீடு 0.4 விழுக்காடும் அனைத்துப் பொருள்களுக்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு ஒரு விழுக்காடும் ஏற்றங்கண்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்