Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள்: இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கியுள்ளன.

பெண்கள் 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் S2 பிரிவின் இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் யிப் பின் சியூ (Yip Pin Xiu) தகுதி பெற்றிருக்கிறார்.

தேர்வுச் சுற்றில் யிப் 11 போட்டியாளர்களில் முதலாவது இடத்தில் வந்தார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 18.19 விநாடி.

அடுத்த நிலையில் வந்தவரின் நேரத்தைவிட அது கிட்டத்தட்ட 4 விநாடி குறைவு.

சிங்கப்பூர் நேரப்படி இன்று நள்ளிரவில் இறுதிச்சுற்று இடம்பெறும்.

நடப்பு வெற்றியாளரான யிப் மீண்டும் போட்டியில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வென்றால் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் அவர் பெறும் ஆறாவது தங்கப் பதக்கமாக அது இருக்கும்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்