Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"ஆசியாவின் வளர்ச்சி மிரட்டலுக்கு உள்ளானாலும் அதைக் கடந்து வரும் திறனை ஆசியா பெற்றிருக்கிறது"

வாசிப்புநேரம் -
ஆசியாவின் வளர்ச்சி மிரட்டலுக்கு உள்ளானாலும் அதைக் கடந்து வரும் திறனை ஆசியா பெற்றிருக்கிறது என்று துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

வட்டாரத்தின் பலதரப்பு அணுகுமுறையால் பருவநிலை மாற்றம், பொருளாதாரத் தன்னைப்பேணித்தனம் போன்ற சவால்களை எதிர்கொள்ள முடிவதாக அவர் சொன்னார்.

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெறும் 28ஆவது Nikkei கருத்தரங்கில் திரு. வோங் பேசினார்.

ஆசியான் அமைப்பு முக்கிய தரப்பினரை ஒன்றிணைக்க முற்படுவதாகத் துணைப்பிரதமர் வோங் சொன்னார்.

பொதுவான அம்சங்களைக் கண்டுபிடித்து வட்டார அமைதியையும் நிலைத்தன்மையயும் ஊக்குவிக்க அவை செயல்படுவதாக அவர் கூறினார்.

ஆசியான் அமைப்பின் நட்பு நாடுகள் ஆசியாவில் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் இருப்பதாகத் திரு. வோங் சொன்னார்.

வெவ்வேறு நாடுகள் கலந்துகொள்வதற்கான தளங்களைக் கொண்டிருப்பது நோக்கம் என்றார் அவர்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்