Skip to main content
ஈரான் போர் ஆசியான் கவலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஈரான் போர் ஆசியான் கவலை

வாசிப்புநேரம் -
ஈரான் போர் ஆசியான் கவலை

(கோப்புப் படம்: AP Photo/Pamela Smith)

மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள நிலைமையைப்பற்றி ஆசியான் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையை ஏற்றுக்கொள்வதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மோதல் மிகுந்த கவலை அளிப்பதாக அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் உள்ள வெளியுறவு அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் கூறிய அவர், அந்நாடுகளுடன் சிங்கப்பூர் இணைந்துநிற்பதை வெளிப்படுத்தியதாகக் கூறினார்.

போரில் ஈடுபடாத நாடுகளின் மீதும், அவற்றின் மக்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

சிங்கப்பூரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வளைகுடா நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்