Skip to main content
ஆசிய விளையாட்டுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆசிய விளையாட்டுகள் - நீச்சலில் சிங்கப்பூருக்கு வெள்ளிப் பதக்கம்

வாசிப்புநேரம் -
ஆசிய விளையாட்டுகள் - நீச்சலில் சிங்கப்பூருக்கு வெள்ளிப் பதக்கம்

CNA/Jeremy Long

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 20 Sep 2026 04:59PM புதுப்பிப்பு : 20 Sep 2026 06:24PM

ஆசிய விளையாட்டுகளில் பெண்களுக்கான 1,500 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் (freestyle) சிங்கப்பூர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

கான் சிங் ஹுவீ (Gan Ching Hwee) 16:00.45 என்ற நேரத்தில் நீந்தி முடித்துப் பதக்கத்தைப் பெற்றார்.

ஆசிய விளையாட்டுகளில் அவர் பெற்றிருக்கும் முதல் பதக்கம் இது.

தேசிய அளவில் அவர் சாதனையும் படைத்துள்ளார்.

கான் 200, 400, 800, 1,500 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலிலும் தனிநபர் பலபாணி (Medley) நீச்சலிலும் தேசியச் சாதனை படைத்தவர்.

அனைத்தும் கடந்த 14 மாதங்களில் படைத்தவை.

ஆசிய விளையாட்டுகளில் 400 மீட்டர், 800 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டிகளிலும் கான் பங்கேற்கவுள்ளார்.

2023இல் நடைபெற்ற விளையாட்டுகளில் சிங்கப்பூர் நீச்சலில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

தியோங் ஸென் வேய் (Teong Tzen Wei) 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் (Butterfly) அதனை வென்றார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்